Total Pageviews

Vettaikaran Golden Jubilee

Golden Jubilee Padagotti

10 August 2019

Everliving MGR (என்றும் வாழும் எம்ஜிஆர்)

Sri MGR Year 102nd, 10th August, Saturday


K.P.Ramakrishnan, MGR's bodyguard, has written two books on our Puratchi Thalaivar MGR, named "Manitha Punithar MGR" and "MGR Oru Sagapatham" through Ananda Vikatan Publications. Now the third book titled "என்றும் வாழும் எம்ஜிஆர் " is published this week.

Already, K.P.Ramakrishnan has given the royalty of the books to Vishrathi Home for the Aged and this new book royalty will go to the same.


"Endrum Vazhum MGR" book is priced Rs.175/- per copy. More about this book is given below by R.Govindaraj, son of K.P.Ramakrishnan.

புரட்சித்தலைவரின் மங்கா புகழ் கொண்ட மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல் வெளியானது “என்றும் வாழும் எம்ஜிஆர் நூல்”
{வெளியீடு விகடன் பிரசுரம்}   ----  நூல் விலை --175 – பக்கங்கள்--- 264

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய திரைத்துறை-அரசியல் பொது வாழ்வு- மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தடத்திலும் நிழலாக ஏறத்தாழ 40 ஆண்டுகள் பயணித்துள்ள திரு.கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் புரட்சித்தலைவருடனான தனது நேரடி அற்புத அனுபவ நினைவலைகளை நினைவு கொண்டுள்ள நூல் இது. 

உயிரோட்டமுள்ள தலைப்பில் உருவாகியுள்ள இந்நூலின் விற்பனையிலிருந்து  ஆசிரியர் எனும் வகையில் தனக்கு கிடைக்கப் பெறவுள்ள ராயல்டி எனப்படும் காப்புறுதி தொகையினை சென்னை  பாலாவாக்கத்தில் செயல்பட்டுவரும் ஆதரவற்ற முதியோர் பராமரிப்பு மையமான விஷராந்தி அறக்கட்டளைக்கு ஐயா திரு.கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் மனிதநேயத்தோடு வழங்கியுள்ளதோடு இந்நூலை வாங்கும் ஒவ்வொருவரும் அதற்கான அச்சிறப்பினை பெற்றிடும் வகையில் இந்த நற்செயலை  செய்துள்ளார் என்பது இந்நூலுக்கான கூடுதல் சிறப்பு. 

ஆம் என்றும் வாழும் எம்ஜிஆர் நூலினை விலைகொடுத்து வாங்கும் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தங்களையும் அறியாமல் இந்த ஆதரவற்ற முதியோர் பராமரிப்பு இல்லத்திற்கு ஒரு சிறு தொகையினை அளிக்கும் ஒரு தரும காரியத்தை செய்யவிருக்கிறார்கள் என்பதும் இந்நூலின் விசேஷம். {நூல் ஆசிரியருக்கான ராயல்டிதொகை மூலமாக }  தான் பெற்ற மனநிறைவும் மன மகிழ்ச்சியும் இந்நூலை வாங்கவிருக்கும்  மற்றவர்களும் பெற்றிடவேண்டும் எனும் பரந்த மனப்பான்மையுடன் செயல்பட்டுள்ளார் திரு.கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள்.   

முதலில் இந்நூலுக்கான விலை ருபாய் 225 என பதிப்பகத்தாரால் தீர்மானிக்கப்பட்டபின் -புரட்சித்தலைவரின் பக்தர்களும் பொதுமக்களும் இந்நூலை இன்னும் குறைந்த விலையில் பெற்றிடவேண்டும் என நூல் ஆசிரியரின் வேண்டுகோளுக்கு இணங்க வேறு சில மாற்றங்கள் செய்யப்பட்டு நூலின் விலை இறுதியாக ரூபாய் 175 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது இங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது.  

இதே விகடன் பிரசுரத்தில் முன்னர் வெளியான எம்ஜிஆர் ஒரு சகாப்தம் மற்றும் மனித புனிதர் எம்ஜிஆர் எனும் தனது இரண்டு நூல்களின் விற்பனையிலிருந்தும்  தனக்கு கிடைக்கவுள்ள காப்புறுதி தொகையினை இதே ஆதரவற்ற முதியோர் பராமரிப்பு மையமான விஷராந்தி அறக் கட்டளைக்கு ஐயா கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் வழங்கி புரட்சி தலைவரின் புகழ் மகுடத்தில் மேலும் பெருமை சேர்த்துள்ளார்.     

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களது திரையுலக வாழ்விலும் பொது வாழ்விலும் இரவு பகல் பாராது அவர் செய்துள்ள எண்ணிடங்கா மனித நேய நிகழ்வுகளை அருகேயிருந்து கண்டு மகிழ்ந்த திரு.கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் தானும் புரட்சித்தலைவர் வழியில் இத்தகைய செயற்கரிய நிகழ்வினை நிகழ்த்தி காட்டியுள்ளது என்பது  மிகவும் போற்றத்தக்கது.   


M.G.R. Blog to you via E mail

M.G.R. Blog to you via E mail
Related Posts Plugin for WordPress, Blogger...

All Time Popular Posts