Total Pageviews

Vettaikaran Golden Jubilee

Golden Jubilee Padagotti

04 April 2019

புரட்சி தலைவர் எம். ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு

Sri MGR Year 102, 4th April, Thursday


Dr.H.V.Hande have published two books on our beloved Leader Puratchi Thalaivar MGR, one is Tamil book title "புரட்சி தலைவர் எம். ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு " and another "The Critical Years Of An Immortal Legend" in English. 



எழுபது ஆண்டுகளுக்கு மேலாக என் பொது வாழ்வில், நான் பல அரசியல் தலைவர்களை சந்தித்திருக்கிறேன். சிலருடன் சேர்ந்து பணியாற்றிருக்கிறேன். இருப்பினும், என் மனதில் எப்பொழுதும் நிலைத்து நிற்பது ஒரு தலைவரை பற்றித்தான், அவர்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.

நான், என் வாழ்நாளில் எதையாவது சாதித்துத்துள்ளேன் என்றால், அது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால்தான். அவர் அந்த அளவிற்கு, என்னை ஒரு அன்புள்ள தம்பியாக வழிநடத்தி சென்றார்.
புரட்சி தலைவர் 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், அப்பல்லோ மற்றும் புரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலகட்டத்தில். நான் அவருடன் பக்கத்திலேயே இருந்தேன். அப்பொழுது வெவ்வேறு பிரச்சினைகளை நாம் சந்திக்க நேர்ந்தது. இவைகளை பற்றிய எல்லா விவரங்களையும், நான் தலைவர் அமரரான இரண்டாண்டுகளுக்கு பின், எழுதிவைத்திருந்தேன். அது அப்படியே வெளிச்சத்தில் வராமல் இருந்து இருக்கும். 2017இல் மலேசியாவில் எனக்கு ஒரு புதுமையான அனுபவம் ஏற்படாமல் இருந்து இருந்தால்!

தீடீரென 2017இல், மலேசியாவின் தலைநகரமான  கோலாலம்பூரியிலுள்ள டாக்டர் புருஷோத்தமன் தலைமையில் இயங்கி கொண்டு இருந்த ஒரு பிரபல கலாச்சார மன்றம், என் நண்பர் டாக்டர் ராஜிவ் துரையின் மூலமாக என்னை தொடர்பு கொண்டார். நான் அழைப்பை ஏற்று, அந்த விழாவில் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கலந்துகொண்டேன். 

என் உரை முடிந்ததும், அன்று அரங்கத்தில் கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட புரட்சித்தலைவரின் அபிமானிகள், என்னை சூழ்ந்து கொண்டு நான் கூறிய புரட்சித்தலைவருடன் நடைபெற்ற நிகழ்வுகளையெல்லாம், ஒரு நூல் வடிவத்தில் கொண்டுவர என்னை வற்புறுத்தினார்கள். அவர்களின் விருப்பத்திருக்கு ஏற்ப புரட்சித்தலைவருடன் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், நான் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிவைத்திருந்த புரட்சித்தலைவர் அப்பல்லோ மற்றும் புரூக்ளின் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்ட காலத்தில் நடந்த நிகழ்வுகளை பற்றியும், இந்நூல் மூலமாக வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முன்வந்துள்ளேன்.

M.G.R. Blog to you via E mail

M.G.R. Blog to you via E mail
Related Posts Plugin for WordPress, Blogger...

All Time Popular Posts