Total Pageviews

Vettaikaran Golden Jubilee

Golden Jubilee Padagotti

11 March 2018

The Real Karnan

Sri MGR Year 101, 11th March, Sunday

We all know that our beloved Leader MGR is a philanthropist and benevolent human being who have walked this earth, second to God in character.

MGR_3_201711061_600_855

Recently the Tamil Nadu Governor Banwarilal Purohit released “Moondrezhuthu Athisayam MGR” book written by VIT Founder Chancellor Dr.G.Viswanathan. In the event the Governor praised MGR’s deeds to the people. The following is sent by MGR Devotee Vinod to share in our blog.

book_release

ஒரு  கல்லூரி  விழாவில்  பேசிய  போது  தமிழக  கவர்னர்  பன்வாரி லால்   புரோஹித்  புரட்சித்  தலைவர்  எம்.ஜி.ஆர்  அவர்களைப்  பற்றி...

"ஏழை...எளிய  மக்கள்  நலனுக்காக  பல்வேறு  திட்டங்களைச்  செயல்படுத்தியவர்  எம்.ஜி.ஆர்.  அவரது  ஆட்சி  காலம்  தமிழகத்தின்  பொற்காலமாகும்.  அவர்  1977  முதல்  1987  வரை  தமிழக  முதல்வராக  இருந்து  பல்வேறு  திட்டங்களைச்  செயல்படுத்தி,  நாட்டுக்கே  வழிகாட்டியாய்  விளங்கினார்.  அவர்  கொண்டு  வந்த  சத்துணவுத்  திட்டத்தால்  பள்ளிகளில்  இடை  நின்றல்  குறைந்தது.

கட்சி  தொடங்கி  5  ஆண்டுகளில்  ஆட்சியைப்  பிடித்து  மத்திய  மாநில  உறவுகள்  சீராக  அமைய  முக்கிய  பங்காற்றினார்.  அவரது  ஆட்சியில்  மற்ற  மாநிலங்களுடன்  நல்லுறவு  இருந்ததால்  கிருஷ்ணா  நதி நீர்  சென்னைக்கு  கிடைக்கப்  பெற்றது.

அரசியலில்  யாரும்  பெற்றிராத  வகையில்,  முதல்வராக  இருந்த  போது  மக்கள்  கொண்டிருந்த  ஆதரவால்  அவரை  யாரும்  தோற்கடிக்க  முடியவில்லை.

அவர்  ஆட்சி  காலத்தில்  தான்  கொடைக்கானலில்  பெண்களுக்கு  என  பல்கலைக்கழகம்,  மகளீர்  மேம்பாட்டுக்  கழகமும்  தொடங்கப்பட்டது.  ராமாபுரம்  தோட்டத்தில்  காது  கேளாதோர்  மேல்  நிலைப் பள்ளி,  சத்யா  ஸ்டூடியோவில்  தொடங்கிய  மகளீர்  கல்லூரி  ஆகியவை  இன்றும்  சிறப்புடன்  செயல்பட்டு  வருகிறது.

மகாபாரதத்தில்  கர்ணன்  கொடையாளராக  இருந்ததைப்  போல்  நிஜ  வாழ்க்கையில்  எம்.ஜி.ஆர்  வள்ளலாக  இருந்தார்.  இந்தியா..சீனா  யுத்தத்தின்  போது  ரூ 50  ஆயிரம்  நிதி  வழங்கி  தனது  தேசப்பற்றை  நிரூபித்தவர்  எம்.ஜி.ஆர்.  அவர்  சுயநிதி  கல்லூரிகளுக்கு  அனுமதி  வழங்கியதின்  மூலம்  தமிழகத்தில்  உயர்கல்வியில்  புரட்சியை  உருவாக்கினார்.

நண்பர்களே!  மனிதருள்  மாணிக்கம்  புரட்சித்  தலைவர்  எம்.ஜி.ஆர்  மறைந்து  30  ஆண்டுகளைக்  கடந்து  விட்ட  நிலையில்  இன்றைக்கும்  அவர்  ஆட்சியில்  செய்த  சாதனைக்கு  புகழாரம்  சூட்டப் படுகிறதென்றால்  அவரை  நாம்  பின்தொடர்வதில்  நமக்கும்  பெருமை  சேர்க்கும்.!  மக்கள்  திலகத்தை  மனம்  திறந்து  பாராட்டி  உள்ள  மேதகு  ஆளுனர்  பன்வாரி லால்  புரோஹித்  அவர்களை  மனதார  வாழ்த்திடுவோம்.!

வீரக்கனல்மு.மாரிமுத்து, தஞ்சை சிந்தனை

M.G.R. Blog to you via E mail

M.G.R. Blog to you via E mail
Related Posts Plugin for WordPress, Blogger...

All Time Popular Posts