
தினத்தந்தி கேள்வி பதில் பகுதியில் எம்.ஜி.ஆர் பதில்கள் 28.7.1972.
சிவாஜி பற்றி எம்.ஜி.ஆரிடம் கேட்ட கேள்விகள்:
கேள்வி: வயதுக்கு ஏற்ற வேடம் தேவை இல்லையா?
எம்.ஜி.ஆர் பதில்: 44 வயது சிவாஜி கணேசன் 80 வயதுக் கிழவனாகவும், 56 வயதாகிய நான் 26 வயது வாலிபனாகவும் நடிப்பது தான் நடிப்பு. அவர் கிழவராகவும் நான் வாலிபராகவும் நடிக்க முடியாவிட்டால் நாங்கள் இருவருமே நடிகர்கள் அல்ல.
(A simple statement defining acting)

MGR congratulating Sivaji Ganesan for receiving Padmashree Award.
கேள்வி: நீங்களும் சிவாஜிகணேசனும் ஒரு படத்தில் சேர்ந்து நடிப்பீர்களா?
எம்.ஜி.ஆர் பதில்: நடிப்பதாக வைத்துக் கொள்வோம். யாருக்கு எவ்வளவு வாய்ப்பு அளிப்பது என்ற பிரச்சினை எழாதா? நான் கதை, படத் தயாரிப்பு, இயக்கம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் கொஞ்சம் அனுபவம் பெற்றவன் என்ற முறையில் கூறுகிறேன், யாருக்கு நேராக காமிராவை வைத்து யாருக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்ற பல பிரச்சினைகள் உருவாகும். அப்புறம் இவருக்கு அதிக வாய்ப்பு அவருக்கு அதிக வாய்ப்பு என்று அங்கும் இங்கும் சொல்ல கால்ஷிட் தகராறு ஏற்பட, பட அதிபரின் கதி என்ன ஆகும்? அப்படியே படம் தயாராகித் திரையிடப்படுவதாக வைத்துக் கொள்வோம் "ஆகா எம்.ஜி.ஆர் நடிப்புத்தான் பிரமாதம்!" என்று ஒரு ரசிகர் சொல்ல. "இல்லை இல்லை அதை விட சிவாஜி கணேசனின் நடிப்புத்தான் பிரமாதம்"! என்று அடுத்த ரசிகர் சொல்ல அடிதடி ஏற்படுமா, ஏற்படாதா? அவர்கள் இந்த போஸ்டர் கிழிக்க, இவர்கள் அந்த போஸ்டர் கிழிக்க பட அதிபர் நிலை?

Sivaji Ganesan giving a memorabilia to MGR congratulating him for his Bharath Award.
கேள்வி: உங்கள் ரசிகர்களுக்கும் சிவாஜி ரசிகர்களுக்கும் மோதல் ஏற்படாமல் இருக்க வழி என்ன?
எம்.ஜி.ஆர் பதில்: அரசியல்வாதிகள் எங்களை விட்டுவிடும் போது அல்லது நாங்கள் அரசியலை விட்டு விலகிக் கொள்ளும் போது வழி கிடைக்காலம்.
(Solution to cease the enmity which never happened to this day even both of them are not alive)

No comments:
Post a Comment