Pages

18 February 2019

Coming Soon

Sri MGR Year 102nd, 18th February, Monday





1973 மற்றும் 1974 ஆண்டின் ஆரம்பத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பல்வேறு இடங்களில் அரசியல் மற்றும் கலை தொடர்பாக மேடையில் பேசியவைகளை தொகுத்து ஆண்டு வாரியாக கொடுக்க நான் எடுத்துள்ள சிறு முயற்சியே இந்த புத்தகம்.

1973 வாக்கில் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியின் போது 2010ல் நமக்கு ஏற்பட்ட அறிவிக்கப்படாத மின்வெட்டு போன்றே அப்பொழுதும் ஏற்பட்டுள்ளது. அன்றைய காலகட்டத்திலும் ஆட்சியாளர்கள் தற்போது கூறும் காரணங்களையே அப்பொழுதும் சொல்லி இருக்கிறார்கள் என்பது ஆச்சரிய படத்தக்க அம்சம். ஆட்சியாளர்கள் மாறினாலும் அரசியல்வாதிகள் மாறுவதில்லை.

இந்த புத்தகத்தில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள் சில பாராட்டு கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசியதையும் கொடுத்து இருக்கிறேன். மேலும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவில் அன்றேயுள்ள கட் அவுட் கலாச்சாரம் பற்றியும், கலைஞர் அவர்களின் ஆட்சின் போது அண்ணா தி.மு.க. தொண்டர்கள் சந்தித்த நெருக்கடிகளையும், போலீஸ் தலையீடும், எம்.ஜி.ஆர். பேசும் பொது கூட்டத்தில் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையும் அதை தடுக்காமல் இருந்த காவல்துறை பற்றியும், பம்பாயில் நடந்த சிறப்பு கூட்டத்தில் தன் மேல் அன்றைய இந்திரா காங்கிரஸ் அரசு எடுத்த வருமான வரி வழக்கு தொடர்பாக பேசிய விவரங்களும், பாரத பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்கு எதிராக துணிச்சலுடன் எதிர்த்து ஆற்றிய உரையும் இதில் அடங்கியுள்ளன.

No comments:

Post a Comment