Pages

10 May 2018

Beautiful Memories

Sri MGR Year 101, 10th May, Thursday

Down the memory lane article by MGR Devoteee Bangalore Vinod.


நினைத்ததை  முடிப்பவன்    9.5.1975    மலரும்  நினைவுகள் .

1971 ஜூன்  மாதம்   இப்படத்தின்  முழு பக்க விளம்பரம்  வெளிவந்தது . 1971  அக்டோபர்   மாதம்  காஷ்மீரில்  பூ  மழைத்தூவி  பாடலும் , காஷ்மீர்  ஏரியில்  ஒருவர் மீது ஒருவர்  சாய்ந்து  பாடல்  காட்சிகள்  படமாக்கப்பட்டது .

1972ல்   நினைத்ததை  முடிப்பவன்  படம் வெளியாகும்  என்று  எதிர்பார்க்கப்பட்டது .

சில தவிர்க்க  இயலாத காரணங்களால்  படம் 1974 ல் மீண்டும் துரிதமாக படமாக்கப்பட்டு  9.5.1975ல் வெளியாகியது .

Kannai Nambaadhe Video Song

எம்ஜிஆர் வில்லனாக  நடித்தது  குறிப்பிடத்தக்கது .

வில்லன்  நடிகர்கள்  நம்பியார் , அசோகன்  காவல் துறை அதிகாரிகளாக  நடித்தது  புதுமை .

ஊர்வசி  சாரதா  எம்ஜிஆரின்  தங்கையாக  சிறப்பாக  நடித்திருந்தார் .

மெல்லிசை  மன்னரின்  இசையில்  எல்லா பாடல்களும்  சூப்பர் ஹிட் .

படத்தில்  மிக சிறந்த  ரீ -ரெக்கார்டிங்  ஒளிப்பதிவு , எடிட்டிங்  இயக்கம்   அருமை

சென்னை  தேவி பாரடைஸ்  அரங்கில்  தொடர்ந்து  100 காட்சிகளுக்கு மேல்  அரங்கு நிறைந்து  வசூலில் சாதனை .

அன்றைய  ஆளுங்கட்சியின்  அதிகார   வன்முறைகள்; மீறி  மாபெரும் வெற்றி  அடைந்தது .

Oruvar Meethu Song


 
எம்ஜிஆரின்  மாறு  பட்ட  இரட்டை வேடத்தில் இளமை தோற்றத்தில்  சுறுசுறுப்பாக  நடித்து  ரசிகர்களை  பரவசப்படுத்திய  காவியம் .

படம்  முழுவதும்  கண்ணுக்கு   குளிர்ச்சியாக  செவிக்கு விருந்தாக  மனதை   மயக்கிய படம்  நினைத்ததை  முடிப்பவன் .

1971ல்  நினைத்தார் .

1975ல் நினைத்தை முடிப்பவனாக   திரையில்  தோன்றினார் .

1977ல்  அரசியல்  களத்தில்  தமிழக  முதல்வராக   எம்ஜிஆர் .

உண்மையில்  எம்ஜிஆர்  ஒருவர்  மட்டுமே  ''நினைத்ததை  முடிப்பவர் ''