Pages

23 March 2011

MGR Nadaga Mandram’s Gift

Sri MGR Year 94, 23rd March, Wednesday

 

MGR Devotee K.P.Ramesh have forwarded an url about MGR’s philanthropy and how he helped to construct a School in Panaimarathupatti.

 

The article is given below.

 

நாடகத்தில் நடித்து பள்ளிக்கு நிதி தந்தவர்
மார்ச் 23,2011,01:55 IST

பனமரத்துப்பட்டி :சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியில் உள்ள துவக்கப் பள்ளிக்கு கட்டடம் கட்ட, 1962ம் ஆண்டு அப்போதைய ஊராட்சி தலைவர் சீனிவாசன் உட்பட சிலர் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சினிமாவில் பிரபலமாக இருந்த எம்.ஜி.ஆரை சந்தித்து, பள்ளி கட்டடம் கட்ட நிதி கேட்க முடிவு செய்தனர்.

 

ஊராட்சி தலைவர் சீனிவாசன், பள்ளி சீரமைப்புக் குழு தலைவர் விஸ்வநாதன், நல்லியாம்புதூர் பெரியதம்பி, சுப்பராயன் ஆகியோர் எம்.ஜி.ஆரை சந்திக்க சென்னை சென்றனர். பனமரத்துப்பட்டியில் நாடகம் நடத்தி, பள்ளி கட்டடம் கட்ட நிதி திரட்டி தருவதாக, எம்.ஜி.ஆர்., உறுதியளித்தார். அதன்படி, அவருடைய நாடக கம்பெனியில் பிரபலமான, "சுமைதாங்கி' என்ற நாடகத்தை பனமரத்துப்பட்டியில் நடத்தி, பள்ளி கட்டடம் கட்ட நிதி திரட்டி தந்துள்ளார்.பனமரத்துப்பட்டிக்கு எம்.ஜி.ஆரை அழைத்து வந்து நாடகம் நடத்தியவரும், அரசு மேல்நிலைப் பள்ளி பி.டி.ஏ., தலைவருமான விஸ்வநாதன் கூறியதாவது:தி.மு.க.,வில் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆரை சந்தித்து, பள்ளிக் கட்டடம் கட்ட நிதி கேட்டோம். சினிமாவில் பிரபலமாக இருந்த எம்.ஜி.ஆர்., பனமரத்துப்பட்டியில் நாடகம் நடத்தி, பள்ளிக்கு நிதி திரட்ட ஒப்புக்கொண்டு தேதி கொடுத்தார். ஒரு நாள் முன்னதாகவே, நாடகக் குழுவினருடன் பனமரத்துப்பட்டிக்கு வந்த எம்.ஜி.ஆர்., ஏரி பூங்காவில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கினார்.அவர் உறுதியளித்தபடி, "சுமைதாங்கி' என்ற நாடகத்தில் நடித்து, துவக்கப் பள்ளி கட்டடம் கட்ட நிதி திரட்டினர்.

 

நாடகத்துக்கு டிக்கெட் விற்பனை செய்ததில், செலவு போக, 14 ஆயிரம் ரூபாய் பள்ளி கட்டடம் கட்ட நிதி கிடைத்தது. அந்தப் பணம் மூலம் துவக்கப் பள்ளிக்கு கட்டடம் கட்டப்பட்டது.இவ்வாறு விஸ்வநாதன் கூறினார்.உதவும் உள்ளம் படைத்த எம்.ஜி.ஆர்., மண்ணைவிட்டு மறைந்தாலும், அவர் திரட்டிக் கொடுத்த நிதியில் கட்டிய கட்டடமும், அவர் நடித்த நாடகமும் இப்போதும் பனமரத்துப்பட்டி மக்கள் நினைவில் நிறைந்து நிற்கிறது.

 

The original link is given below.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=211121